இடையூறாக காணப்பட்ட மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகள்

"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய, பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்ட மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

இப்பணிகள், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் விதமாகவும் இடம் பெற்றன.