அமீர் அலி சிறுவர் பூங்கா அருகிலுள்ள நீர்யோடைப்பகுதியை அழகுபடுத்த நடவடிக்கை

சம்மாந்துறை அமீர் அலி சிறுவர் பூங்கா அருகிலுள்ள நீர்யோடைப்பகுதியை அழகுபடுத்தி, உள்ளூர் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்ப நடவடிக்கையாக, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், கல்முனை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ.எம்.எம். அஸ்கி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.