சம்மாந்துறை பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஐ.எம்.றூமில் அவர்கள் வளவாளராக பங்கேற்று, வருமானத்தை உயர்த்தும் நோக்கில் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், நிதி மற்றும் வருமானப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.