சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வாசகர் வட்டத்தினரும், சபையின் கௌரவ தவிசாளர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வாசகர் வட்டத்தினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு, தவிசாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இவ் சந்திப்பின் போது, நவீன உலகின் கல்வி சவால்களுக்கு தகுந்தாற்போல மாணவர் சமூகத்தை உருவாக்க நூலகங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதற்கேற்ப, தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, நூலக அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில், அமீர் அலி பொது நூலக வாசகர் வட்டத் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் எச்.எம். அன்வர் அலி, உப தலைவர் பி.ரீ.றாசிக், உப செயலாளர் ஏ.ஜே. காலித் மிஷ்அல், மற்றும் நூலகர் ஏ.ஆர்.எம். இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.