மஜீட்புர பிரதேசத்திற்கு கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேரில் விஜயம்.
மஜீட்புர பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் இன்று புதன்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது மஜீட்புரம் பாடசாலை வீதியை பார்வையிட்டு, பொதுமக்களின் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகளை கேட்டறிந்தார்.
அறுவடை முடிவடைந்த நிலையால், யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி மற்றும் பழுதடைந்த மின் விளக்குகளை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அஷ்ரப் சனசமூக நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.



















0 Comments