வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள்
சம்மாந்துறை பிரதேசத்தில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய, வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான S வாய்க்கல், கைகாட்டி சந்தியிலிருந்து அன்வர் இஸ்மாயில் மாவத்தை வரையான பிரதேசத்தில் மண்ணால் நிரம்பி, நீர் தேங்கி வழிந்து செல்ல முடியாத நிலையிலிருக்கின்றது.
இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பொறியலரிடம் விடுக்கப்பட்ட வேண்டு கொளுக்கமைய, வாய்க்காளில் காணப்பட்ட மண்களை அகற்றி சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு, அப்பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
0 Comments