கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மாந்துறை உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மாந்துறை உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறையில் நடக்கும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் சம்மாந்துறையில் எதிர்காலத்தில் தன்னால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தார்.
எதிர்காலத்தில் சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைந்து செயல்பட அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்கள் தனது முழுமையான ஒத்துழைப்பை தருவதாக வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மாந்துறை தலைவர் சியாட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.