தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்பு

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பதிவு செய்யப்படாமல் இயங்கும் நிறுவனங்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கருத்துக்களும் பெறப்பட்டது.