கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்
மூன்றாம் நிலை தொழில்சார் கல்விப் பிரிவின், விதி முறையான மற்றும் கவர்ச்சிகரமான நிறுவன முறைமையை கட்டி எழுப்புவதற்காக, "ஊழிய செயற்பாடு" என்ற தொனிப்பொருளின் கீழ், கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அதிபர் எஸ்.தியாகராஜா, பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments