ஆழமான, பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இடங்களைப் பார்வையிடல்

சென்னல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில் கல்குவாரியினால் உருவான ஆழமான, பாதுகாப்பற்ற நிலை காணப்படும் குட்டையை பார்வையிடுவதற்காக, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுடன் செவ்வாய்க்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்டார்.

இக்குட்டையை மூடி பொதுபயன்பாட்டிற்கான இடமாகமாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதுடன், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் மூடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.