சம்மாந்துறை ஆண்டிசந்தி பஸ் நிறுத்துமிடம் மீது கவனம் – தவிசாளர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை

சம்மாந்துறை ஆண்டிசந்தியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தும் நிலையம் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு முறைப்பாடுகள் எழுந்தன.
இதை அடுத்து, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் இன்று நேரில் சென்று குறித்த இடத்தை பார்வையிட்டார்.
பேருந்து நிறுத்தும் நிலைத்திற்கு முன்பாகவுள்ள மற்றைய பேருந்து நிறுத்தும் நிலையத்தை வர்ணம் பூசி அழகுபடுத்துமாறு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.வீ.எம்.ஜெசீர் அவர்களுக்கு தவிசாளர் உத்தரவிட்டார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எச்.ஏ. காலித், எம்.ஐ.எம். ரிஸ்விக்கான் ஆகியோரும் பங்கேற்றனர்.