சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் விஜயம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம். ஜனூபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேற்று புதன்கிழமை பாடசாலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை ஊடக செல்லும் வடிகான் தொடர்பான பிரச்சினையை நேரில் பார்வையிட்ட அவர், அது தொடர்பாக கனரக வாகனத்தின் உதவியுடன் உடனடி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபாவிற்கு பணிபுரை வழங்கினார்.