வட்டார பிரதேசத்திலுள்ள பல வீதிகள் மற்றும் வடிகால்களை நேரில் பார்வையிடல்

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஏ.எல்.எம். ஜிப்ரி அவர்களின் கோரிக்கையின் பேரில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேற்று சனிக்கிழமை (2025.07.19) கெளரவ உறுப்பினரின் வட்டார பிரதேசத்திலுள்ள பல வீதிகள் மற்றும் வடிகால்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் முன்வைத்த குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

இவ் பார்வையின் போது, பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா, உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.