சட்டத்தரணிகள் சங்கத்துக்கும், பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களுக்குமிடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களுக்குமிடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க பிரதி தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நஸீல், சமாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.வை.அன்வர் ஸியாத், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், கெளரவ உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் உள்ளிடோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.