நூர்ப்பள்ளிவாசல் பிரதேசத்தில் குப்பைகள் மற்றும் மணல் அடைத்த வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் வை.எல். பஸீர் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பங்களிப்புடன், நூர்ப்பள்ளிவாசல் பிரதேசத்தில் குப்பைகள் மற்றும் மணல் அடைத்த வடிகால்கள் சனிக்கிழமை (2025.07.19) சுத்தம் செய்யப்பட்டது.
இவ்வேலைத்திட்டம், கெளரவ உறுப்பினர் வை.எல்.பஸீர் அவர்களின் சொந்த வாகனம் மற்றும் பிரதேச சபையின் வாகனங்கள் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டது. வடிகால்களில் அடைத்த மணல் அகற்றப்பட்டு, மக்கள் பாதிப்பின்றி பயன்பெறுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது.
கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார்.
0 Comments