சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை நேரடிகாயக பார்வையிட்ட கௌரவ தவிசாளர்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளிகளை பார்வையிட வருபவர்கள் வீதியோரங்களில் காத்திருப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்களும் சமூக அமைப்புகளும் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று கௌரவ தவிசாளர், வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் டாக்டர் டி. பிரபாசங்கரை சந்தித்து கலந்துரையாடியதுடன் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நிலமையைப் பார்வையிட்டார்.
இதற்கான நிரந்தரத் தீர்வாக, நோயாளிகளை பார்வையிட வருபவர்கள் வைத்தியசாலையின் உட்பகுதியில் தரித்திருப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வதாக வைத்திய அத்தியேட்சகர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், மல்வத்தை விவசாய விரிவாக்க நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.ஏ. கரீம், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments