கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் வளத்தாப்பிட்டிக்கு நேரில் விஜயம்

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உதவி தவிசாளர் வீ.வினோகாந் அவர்களின் அழைப்பின் பேரில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை புதிய வளத்தாப்பிட்டிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டார்.

சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், மையானம், வாசிப்பு நிலையம், வீதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களை நேரில் பார்வையிட்டார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எம்.எம்.எம். முஸ்தபா, எம்.வீ.எம். ஜெசீர் ஆகியோரும் கலந்து கொண்டு தேவையான விளக்கங்களை வழங்கினர்.