பொது நூலகங்கள் மற்றும் வாசிப்பு நிலையங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கல்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், சம்மாந்துறைப் பிரதேச சபையின் கீழுள்ள பொது நூலகங்கள் மற்றும் வாசிப்பு நிலையங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பிரதேச சபையின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இப்புத்தகங்களை, சம்மாந்துறைப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள், நேற்று வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், நூலகர்கள், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.