சுற்றுலா அபிவிருத்தி வேலை திட்டம்
சுற்றுலா அபிவிருத்தி வேலை திட்டத்தின் கள நிலவரங்களை ஆராய்வதற்காக குறித்த அமைச்சின் சுற்றுலாத்துறைக்கான பிரதிப் பணிப்பாளர், சிரேஷ்ட பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு சம்மாந்துறைக்கு வருகை தந்தனர். சம்மாந்துறை பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசல கூடங்கள் விரைவில் நிர்மாணிக்கப்பட உள்ளன. சுற்றுலா துறையின் மேம்பாட்டையும், பொதுமக்களின் தேவையையும் கருத்தில் கொண்டு இவ்வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்கான பிரதிப் பணிப்பாளர், சிரேஷ்ட பொறியியலாளர் உள்ளிட்ட குழுவுடன் இணைந்து, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேரடி கள விஜயம் மேற்கொண்டு திட்டமிட்ட ஐந்து பிரதேசங்களை பார்வையிட்டார்.
0 Comments