பாடசாலை மாணவர்கள் சபையின் முதலாவது கன்னி அமர்வை பார்வையிடுவதற்காக


சம்மாந்துறை அல்-முனீர் பாடசாலையின் மாணவ தலைவர்கள், சம்மாந்துறை பிரதேச சபையின் 5ஆவது சபையின் முதலாவது கன்னி அமர்வை பார்வையிடுவதற்காக, சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க, முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் சபை அமர்வை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
சபையின் அமர்வை பார்வையிட்டதுடன், சபை முடிந்தவுடன் சபைக்குள்ள சென்று கௌரவ தவிசாளரை நேரில் சந்தித்து உரையாடினர். அதையடுத்து, அவர்கள் குழுப்புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.