சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பு

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள், இன்று திங்கட்கிழமை (2025.06.30) உத்தியோகபூர்வமாக தனது தவிசாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்பு நிகழ்வின் ஆரம்பத்தில், மௌலவி ஆஷாத் விசேட துஆ பிரார்த்தனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் முன்னிலையில் அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கௌரவ உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.