அல்-குர்ஆன் பாராயணமும், துஆ பிரார்த்தனையும்

சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றி 2025.06.18 ஆம் திகதி மரணித்த தொழில்நுட்ட உத்தியோகத்தர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர் எம். முனவ்வர் அவர்களுக்கும், புனித ஹஜ் கடமைக்காக சென்று மதினாவில் மரணித்த சம்மாந்துறை சபையின் முன்னாள் கெளரவ உப தவிசாளர் மஹூம் அல்ஹாஜ் ஏ. அச்சு முஹம்மட் அவர்களுக்குமான அல்-குர்ஆன் பாராயணமும், துஆ பிரார்த்தனையும் பிரதேச சபையின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று இடம் பெற்றது.

இதன்போது சம்மாத்துறை பிரதேச சபையின் முன்னாள் கெளரவ தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌசாட், முன்னாள் கெளரவ உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபையின் செயலாளர்கள், உலமாக்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மரணித்தவர்களின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.