தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம் நெளபல், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.சுல்பா, அல்-அமீர் பாடசாலை அதிபர் எச்.எம்.நூருல் ஹிமாயா, சம்மாந்துறை பிரதம தபால் அதிபர் பி.எம் அஸாருத்தீன், இரண்டாம் மொழி பாட வளவாளர்களான என்.எம். புவாட், கே.பீ.பிரதீப் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments