முக்கியமான அறிவித்தல்
கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட கால்நடைகளைக் கட்டுப்படுத்தல்
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைத்தவண்ணமுள்ளது.
இது தொடர்பாக பல தடவைகள் பொதுமக்களுக்கு பகிரங்க அறிவிப்பு செய்யப்பட்ட போதும், கட்டாக்காலியாக ஆடுஃமாடுகள் அலைய விடப்பட்ட நிலையில் வீதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
கட்டாக்காலியாக அலைய விடப்பட்டுள்ள மாடுகள், ஆடுகள் அதன் உரிமையாளர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கட்டி அல்லது அடைத்துப் பராமரிக்கவும்.
தவறும் பட்சத்தில் பொலிசாரின் உதவியுடன் பிரதேச சபையால் பிடிக்கப்படும் மாடுகள் (கால்நடைகள்) 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தின், பிரிவு 65,66,67 இற்கு அமைய பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2025.03.17முதல் இச்செயற்பாடு தொடராக இடம்பெறும் என்பதையும் அறியத் தருகின்றேன்.
0 Comments