கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) வேலைத் திட்டம்
ஜனாதிபதி செயலகத்தின் அழகான நாடு புன்னகைக்கும் மக்கள் எனும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறையிலுள்ள அரச அலுவலங்கள், சமூக மட்ட அமைப்புக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் ஒன்றினைந்து ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வுக்கு கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ரிசாட் எம் புஹாரி, சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல் கஜன், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.நௌசாத் முஸ்தபா, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி எஸ்.ஜெயலத், மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.ஏ.கரீம், திணைக்கள தலைவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள் பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கல்லரிச்சல் பிரதேசம், மஸ்ஜிதுல் உம்மா பள்ளிவாசலை அண்மித்த பிரதேசம், அல்- மர்ஜான் பாடசாலை அருகாமையிலிருந்து சுவானியர் வடிகான், முகைதீன் மாவத்தை வீதி ஆகிய பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டது.





















































0 Comments