"கிளீன் ஸ்ரீலங்கா" (Clean Sri Lanka) செயற்திட்டத்திம்

ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "கிளீன் ஸ்ரீலங்கா" (Clean Sri Lanka) செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க வீரமுனை விளையாட்டு மைதானம் மற்றும் அதனை அன்றிய அலவக்கரை பிரதேசத்தினை சுத்தம் செய்யும் பணிகள் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இன்று சனிக்கிழமை (2025.02.01) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது எமது சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் மைதானத்தில் காணப்பட்ட பற்றைகள் மற்றும் புதர்கள்
குப்பை மேடுகள் அகற்றப்பட்டதுடன் அதனை அன்றிய அலவக்கரை பிரதேசமும் சுத்தம் செய்யப்பட்டது.
இப்பிரதேசம் மக்கள் பொழுதுபோக்கு இடமாக மாற்றியமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.