77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபையுடன் நம்பிக்கையாளர் சபை, மேசன் தொழிலாளர் சங்கம், முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த "தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" எனும் தொனிப்பொருளில் 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வும், அரசின் Clean Sri Lanka செயற்திட்டதுடன் இணைந்ததாக சிரமதானமும் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (2025.02.04) இடம்பெற்றது.

தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன், நாட்டு மக்கள் அனைவரும் சமதானமும் சௌபாக்கியத்துடன் வாழ வேண்டி விசேட துஆப் பிராத்தனை மற்றும் மையவாடி வாளாகம் கனரக வாகனங்களின் உதவியுடன் மரங்கள் மற்றும் பற்றைக்காடுகள், புல்பூண்டுகள் வெட்டப்பட்டு தூப்புரவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் ஐ.எம் ஹனீபா, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ.எம்.இஸ்ஹாக், மேசன் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.வீ.ஹஸன், சம்மாந்துறை மேசன் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.சல்பியார், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சுற்றாடல் கழக மாணவிகள், நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகள், முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகள், அல்-மஜ்லிஸ் அஸ்ஸுரா நிர்வாகிகள், மேசன் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பரமவுன்ட் ஹாட்வெயார் நிறுவனத்தினால் இந்நிகழ்வுக்கான காலை உணவும், தேனீர் உபசரணை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.