சம்மாந்துறை பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல்


சம்மாந்துறை பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் கல்லரிச்சல் பிரதேசத்தில் பிரதான நிகழ்வும், அதனுடன் மஸ்ஜிதுல் உம்மா பள்ளிவாசலை அண்மித்த பிரதேசம், அல்- மர்ஜான் பாடசாலை அருகாமையிலிருந்து சுவானியர் வடிகான் ஆகிய மூன்று இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நாளை (2025.02.26) புதன்கிழமை காலை 6.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டம் தொடர்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் செயலாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இவ்வேலைத்திட்டத்திற்கு உத்தியோகத்தர்கள், ஊழியர்களை மூன்று குழுக்களாக பிரிந்து பங்குபற்றுவதுடன், கனரக வாகனம் மற்றும் வாகனம் வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.