Clean Sri Lanka - அழகான நாடு புன்னகைக்கும் மக்கள் வேலை திட்டத்தின்
கிளீன் ஶ்ரீ லங்கா -அழகான நாடு புன்னகைக்கும் மக்கள் எனும் வேலை திட்டத்தின் முதல் கட்ட பணிகள் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் ஊழியர்களினால் கோரக்கோவில் வீதியில் வயல் நிலங்களை அண்டிய பிரதேசத்தில் மரங்கள் மற்றும் பற்றைகள் வளர்ந்து காடாக காணப்படும் பற்றைக்காடுகள், புல்பூண்டுகள் வெட்டப்பட்டு தூப்புரவு செய்யப்பட்டதுடன், வீரமுனை பிரதான வீதி மற்றும் நாய்க்குட்டியார் சந்தி உள்ளிட்ட வீதியோரங்களும் சுத்தம் செய்யபட்டது.






.jpg)





0 Comments