பொதுப்பாதைகளில் விழக் கூடிய ஆபத்தான மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணி
சம்மாந்துறை பிரதேசத்தில் அசாதாரண காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது பொதுப்பாதைகளில் விழக் கூடிய ஆபத்தான மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணிகளை சம்மாந்துறை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து மல்கம்பிட்டி வீதியின் தாருல்ஸலாம் பாடசாலைக்கு முன்பாக விழும் ஆபத்தில் காணப்பட்ட காயா மரம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் நேரடி கண்காணிப்பில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இன்று வியாழக்கிழமை மாலை (2025.01.23) மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
0 Comments