தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) சம்மாந்துறை பிரதேச சபையிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிலட்) கல்வி மற்றும் ஆய்வு அதிகாரி திருமதி.பாலரஞ்சனி காந்தீபன், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிலட்) கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. கல்யாணி, சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.சுல்பா, இரண்டாம் மொழி பாட வளவாளர்களான என்.எம். புவாட், கே.பீ.பிரதீப் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments